சென்னையில் 2 நாட்களுக்கு மேலாக டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது.
சென்னையில் ஏற்படும் டீசல் தட்டுப்பாடு குறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் விசாரித்த போது, சென்னை அரும்பாக்கம், கீழ்ப்பாக்கம், பகுதிகளில் உள்ள இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பங்க்குகளில் எந்த வித டீசல் தட்டுப்பாடும் இல்லை என்று பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை அருகில் உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோல் பங்க்கில் 5 நாட்களாகவே டீசல் குறைபாடு இருந்து வருகிறது. 10,000 லிட்டர் தேவைப்படும் இடங்களில் 4 முதல் 5 ஆயிரம் லிட்டர் தான் தருகிறார்கள். என்ன பிரச்சனை எதனால் இந்த தட்டுப்பாடு என்று தெரியவில்லை என்றனர்.
அதேபோல், எழும்பூர் DPI வளாக சாலையில் உள்ள பாரத் பெட்ரோலிய பங்க்கில் 2 நாட்களாக டீசல் அளவு குறைவாக தான் வருகிறது என்றும் தற்போது சரியாகி வருகிறது எனவும் கூறினர். இன்று மதியத்திற்கு மேலும் டீசல் முறையாக கிடைக்கவில்லை என்றால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று பங்க் ஊழியர்கள் தெரிவித்தனர்.