உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியாவுக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனரா? – வைரலாக பரவும் வீடியோவின் உண்மைதன்மை என்ன?

This news fact checked by Logically Facts உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா நேற்று கௌசாம்பி தொகுதியில் பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டார் என்கிற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.…

This news fact checked by Logically Facts

உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா நேற்று கௌசாம்பி தொகுதியில் பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டார் என்கிற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதன் உண்மைத் தன்மையை லாஜிக்கலி ஃபேக்ட்ஸ் நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இது குறித்து விரிவாக காணலாம்.

 உத்திர பிரதேச துணை முதல்வருக்கு எதிராக பெண்கள் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனரா?

மக்களவைத் தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கி மாலை 6 மணியளவில் நிறைவடைகிறது.  6 மாநிலங்கள்,  2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது.  இதில் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகள்,  மகாராஷ்டிராவில் 13 தொகுதிகள்,  மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள்,  பீகார் மற்றும் ஒடிசாவில் 5 தொகுதிகள்,  ஜார்க்கண்ட்டில் 3 தொகுதிகள் என 6 மாநிலங்களில் 47 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.  ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களில் தலா தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் இன்று உத்தர பிரதேசத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று கௌசாம்பி தொகுதியில் உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியாவை அப்பகுதி பெண்கள் சூழ்ந்து கொண்டு அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் ”கேசவ் பிரசாத் மௌரியா ஒரு திருடன்” என பெண்கள் முழக்கங்களை எழுப்புகின்றனர்.

வைரலான வீடியோ உண்மையா?

உத்தர பிரதேச மாநில எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஐபி. சிங் தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த  வீடியோவை பகிர்ந்து ” மக்களின் எதிர்ப்பைக் சமாளிக்க முடியாமல் கேசவ் பிரசாத் மௌரியா வினோத் சோங்கருடன் தப்பி ஓடிவிட்டார்.  உ.பி.யில் 10 இடங்களுக்கு கூட பா.ஜ.க போராட வேண்டியுள்ளது” என பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போதையது அல்ல என லாஜிக்கலி ஃபேக்ட்ஸ் உண்மை சரிபார்ப்பு நிறுவனம் கண்டறிந்துள்ளது.

உண்மை சரிபார்ப்பு :

சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவை கூகுள் தேடலுக்கு உட்படுத்திய போது அது ஜனவரி 23, 2022 அன்று, டி.வி.9 உத்தரப்பிரதேசம் உத்திரகாண்ட் எனும் தொலைக்காட்சியின்  யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட  வீடியோவைக் காட்டியது. இந்த வீடியோ வைரலான கிளிப்பைப் போன்ற காட்சிகளை இடம்பெற்றிருந்தது. மேலும் இந்த வீடியோவின் தலைப்பில்  உ.பி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக  குறிப்பிட்டிருந்தது.  இந்த வீடியோ 2022 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலின் போது சிரத்து தொகுதியில் படமாக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

அதேபோல ஜனவரி 23, 2022 அன்று டைனிக் பாஸ்கர் வெளியிட்ட ஒரு செய்தியிலும் இதேபோன்ற செய்திகள் இடம்பெற்றது கண்டறியப்பட்டது. மேலும் நவ்பாரத் டைம்ஸ் , நியூஸ் 18 உத்தரப்பிரதேசம் மற்றும் பிரபாத் கபார் போன்ற பல ஊடகங்களும் ஜனவரி 2022 சம்பவத்தைப் பற்றி செய்திகள் வெளியிட்டுள்ளன.

முடிவு :

உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா நேற்று கௌசாம்பி தொகுதியில் பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டார் என்கிற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ தற்போதையது அல்ல 2022ல் வெளியிடப்பட்டது என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

This story was originally published by  Logically Facts and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.