கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? ஒருவழியா பதில் கிடைச்சிருச்சு!

உலகில் நீண்ட நாட்களாக விடை தெரியாமல் இருந்த கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா என்ற கேள்விக்கு ஆராய்ச்சியாளர்கள் பதிலை கண்டுபிடித்துள்ளனர். உலக மக்கள் இடையே பன்னெடுங்காலமாக விடை தெரியாமல் பல கேள்விகள்…

உலகில் நீண்ட நாட்களாக விடை தெரியாமல் இருந்த கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா என்ற கேள்விக்கு ஆராய்ச்சியாளர்கள் பதிலை கண்டுபிடித்துள்ளனர்.

உலக மக்கள் இடையே பன்னெடுங்காலமாக விடை தெரியாமல் பல கேள்விகள் சுழன்று வருகின்றன. அதில் முக்கியமான ஒன்று கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்பது தான். இந்த கேள்வியை வாழ்க்கையில் ஒருமுறையாவது நாம் அனைவரும் எதிர்கொண்டு இருப்போம். ஆனால், விடை என்பது இதுநாள் வரையிலும் தெரியாமலேயே தெரிய வந்தது.

காரணம் முதலில் முட்டை தான் வந்தது என்றால் கோழி எங்கிருந்து வந்தது என கேள்வி எழுப்பப்படும். அதே கோழி தான் முதலில் வந்தது என்றால் முட்டை எங்கிருந்து வந்தது என கிடுக்குப்பிடியாக கேள்வி எழுப்பப்படும். பல ஆண்டுகளாக விடை தெரியாமல் குழப்பத்தை ஏற்படுத்திய அந்த கேள்விக்கு ஒரு வழியாக ஆராய்ச்சியாளர்கள் அறிவியல்பூர்வமாக ஒரு விளக்கத்தை தெரிவித்துள்ளனர்.

லண்டனில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பின்படி, இப்போது இருக்கும் ஊர்வன, பரப்பன மற்றும் பாலூட்டிகளின் ஆரம்பகால மூதாதையர்கள் முட்டையிடுவதற்கு பதிலாக குட்டிகளை பெற்றெடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. 51 புதைபடிவ இனங்கள் மற்றும் 29 உயிரினங்களை பகுப்பாய்வு செய்து அந்த ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. குட்டிகளை ஈன்று கொண்டிருந்த சில விலங்குகள் பரிணாம வளர்ச்சியில், முட்டைகளை போடும் உயிரினங்களாக பல மில்லியன் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கலாம்.

பல பல்லி இனங்கள் மற்றும் பாம்புகள் இரண்டு வகையான இனப்பெருக்க உத்திகளைக் கையாள்கிறது. அவை குட்டியும் ஈன்றெடுக்கிறது, முட்டையும் இடுகிறது என்பதால் அவை ஆராச்சியாளர்களுக்கு சவால் நிறைந்தவையாக இருந்தது. பெரும்பாலான இனங்கள் லைவ்பியரர்ஸ் எனும் மீன்கள் இனத்தை சேர்ந்தவை என ஆராய்ச்சிகள் கூறின. இந்த லைவ்பியரர்ஸ் வகைகள் முட்டைகளை உடலுக்குள் தக்க வைத்து குட்டிகளை ஈன்றெடுக்கும் வகையை சார்ந்தவை.

மேலும், முதலில் குட்டிகளை போட்டுக்கொண்டிருந்த கோழியின் மூதாதைய உயிரினம் பரிணாம வளர்ச்சியில் முட்டை போடும் கோழிகளாக மாறியிருக்கலாம். அவை இப்போது முட்டை போட்டு குஞ்சு பொரிக்கின்றன. முதலில் மென்மையாக இருந்த முட்டை ஓடுகள் பரிணாம வளர்ச்சியில் கடினமான ஓடுகளாக மாறியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியின் முடிவுகள் இன்னும் முழுமையாக கிடைக்கப்பெறவில்லை என்றாலும், தகவமைப்பின்படி இவ்வாறாக இருக்கலாம் என ஆராய்ச்சி குழு பரிந்துரைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.