ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒட்டகச்சிவிங்கி ஒன்று எலும்பை கடித்து ருசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில், அது தற்போது வைரல் ஆகியுள்ளது.
சமூக ஊடகங்களை தொடர்ந்து பயன்படுத்துபவராக இருந்தால், கடந்த சில நாட்களுக்கு முன் மான் ஒன்று பாம்பை உண்ணும் காட்சியை பார்த்து வியந்திருப்பீர். அந்த வீடியோ மக்களை குழப்பத்திலும் கேள்விகளிலும் ஆழ்த்தியதில் ஆச்சரியமில்லை. தற்போது அதே போன்று மற்றொரு வீடியோ வெளியாகி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒட்டகச்சிவிங்கி ஒன்று எலும்பை கடித்து ருசித்து உண்ணும் வீடியோதான் அது. இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் மான் பாம்பை உண்ணும் வீடியோவையும் சேர்த்து ட்விட் செய்துள்ள அவர் “ஒட்டகச்சிவிங்கிகள் தாவரவகைகள் மற்றும் மரத்தின் உச்சியில் உள்ள இலைகள் மற்றும் மொட்டுகளை அடைய அவற்றின் நீண்ட கழுத்தைப் பயன்படுத்துகின்றன. அவை அந்த வகையில் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளன. ஆனால் சில நேரங்களில் பாஸ்பரஸ் பெற எலும்புகளை மென்று சாப்பிடலாம். இயற்கை அற்புதமானது, ”என்று பதிவிட்டுள்ளார்.
ஜூன் 12-ஆம் தேதி பகிரப்பட்டுள்ள இந்த விடியோ தொடர்ந்து சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது. அதோடு இதுகுறித்து பலர் தங்கள் கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர். ஒருவர் ஒட்டகச்சிவிங்கியின் லேட்டஸ்ட் டிரண்ட் சினாக்ஸ் போல, எலும்பை சாவகாசமாக சாப்பிடுகிறது எனக் கூறியுள்ளார். மற்றொருவர் இது குறித்த கேள்வி வரும் UPSC தேர்வில் கேட்கப்படும் எனக் கேலி செய்துள்ளார்.







