This News Fact Checked by ‘India Today’
கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து தலைநகர் நியூயார்க் வரை தீ பரவி வருவதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தீயில் சிக்கி ஏற்கனவே 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து தலைநகர் நியூயார்க் வரை தீ பரவி வருவதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தீ பரவி வரும் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகள் வெளியேற்றப்படுவதை காட்டும் வீடியோவுடன் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் பதிவில், “கலிபோர்னியாவில் ஏற்பட்ட தீ, அனைத்து கட்டுப்பாடுகளை மீறி தற்போது நியூயார்க்கிலும் பரவி வருகிறது என்பதுதான் செய்தி. நோயாளிகளுடன் மருத்துவமனைகளை விட்டு வெளியேறும் அகதிகளின் படங்கள் நெஞ்சை பதற வைக்கின்றன” என பரவும் பதிவை கீழே காணலாம்.
இருப்பினும், இந்தியா டுடே நடத்திய விசாரணையில், தீ நியூயார்க்கிற்கு பரவவில்லை என்று கண்டறியப்பட்டது. கலிபோர்னியாவில் இருந்து மூத்த குடிமக்கள் வெளியேற்றப்படும் காட்சிகள் பரவி வருகின்றன.









