முக்கியச் செய்திகள்இந்தியாFact Check Stories

குரு கோவிந்த் சிங்கின் சீடர்களில் ஒருவர் தனது மாமா என பிரதமர் மோடி கூறினாரா? உண்மை என்ன?

This News Fact Checked by ‘Logically Facts

குரு கோவிந்த் சிங்கின் சீடர்களில் ஒருவர் தனது மாமா என பிரதமர் மோடி கூறவில்லை என்பது அம்பலமாகியுள்ளது.  பரப்பப்பட்ட தகவல் என்ன?

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சீக்கியர்களின் பத்தாவது மற்றும் கடைசி குருவான குரு கோவிந்த் சிங்கின் ‘பஞ்ச் பியாரே’ எனப்படும் 5 சீடர்களில் ஒருவர் தனது மாமா என பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக சமூக வலைதளங்களில் காணொளி ஒன்று வைரலாக பரவி வருகிறது.  ஐந்து அன்பர்கள் என்றும் அழைக்கப்படும் பஞ்ச் பியாரே சீக்கிய மதத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர். 1699 இல் ஆனந்த்பூர் சாஹிப்பில் குரு கோவிந்த் சிங்கால் பாய் தாய் சிங், பாய் தரம் சிங், பாய் ஹிம்மத் சிங், பாய் மோகம் சிங் மற்றும் பாய் சாஹிப் சிங் ஆகிய ஐந்து சீக்கியர்களுக்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டது.  இந்த ஐந்து உறுப்பினர்களும் ‘கல்சா’ எனப்படும் சீக்கிய சமூகத்தை உருவாக்கினர்.

இந்நிலையில்,  வைரலான வீடியோவில்,  மோடி ஆரஞ்சு நிற தலைப்பாகை அணிந்து ஒரு பேரணியில் உரையாற்றுகிறார்.  அதில்,  “பஞ்ச் பியாரில் ஒருவர் தனது மாமா என்று மோடி கூறுகிறார்.  பல சமூக வலைதள பயனர்கள் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். X இல் ஒரு பயனர், “பஞ்சாபில் மோடியின் பிரேக்கிங் நியூஸ்.  வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் தோல்வியை சந்திக்க நேரிடும் என்கிற அச்சம்,  நரேந்திர மோடியின் “மன ஆரோக்கியத்தை” பாதித்துள்ளது. கு ரு கோவிந்த் சிங்கின் “பஞ்ச் பியாரே” யில் தனது மாமாவும் ஒருவர் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு 1 மற்றும் பதிவு 2 – ஐ இங்கே காணலாம் .

வைரல் பதிவுகளின் ஸ்கிரீன்ஷாட்கள். (ஆதாரம்: எக்ஸ்/ஸ்கிரீன்ஷாட்)

எனினும்,  அந்தக் கூற்று பொய்யானது என்று கண்டறிந்தோம்.  உண்மையில்,  குரு கோவிந்த் சிங் ஜியின் ‘பஞ்ச் பியாரே’ ஒன்று குஜராத்தில் உள்ள துவாரகாவைச் சேர்ந்தவர் என்றும்,  இதனால் அவர் பஞ்சாப் மக்களுடன் இரத்த உறவு வைத்திருப்பதாகவும் நரேந்திர மோடி கூறியிருந்தார்.

உண்மையை எப்படிக் கண்டுபிடித்தோம்?

இந்த வீடியோ மே 23, 2024 அன்று பஞ்சாபின் பாட்டியாலாவில் பிரதமர் நரேந்திர மோடியின் பேரணியில் இருந்து எடுக்கப்பட்டது என்பதைக் கண்டறிந்தோம்.  நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் அசல் உரை பதிவேற்றப்பட்டது,  ‘பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்’.

30 நிமிட நீளமான வீடியோவில் 17:53 முதல் 18:12 வரை வைரலான வீடியோ பகுதியைக் காணலாம்.  அசல் வீடியோவில்,  மோடி,  “இந்தப் பிரதமர் விஷயத்தை நீங்கள் விட்டுவிடுங்கள்.  குரு கோவிந்த் சிங்கின் ஐந்து சீடர்களில் ஒருவர் குஜராத்தின் துவாரகாவைச் சேர்ந்தவர்.  அதனால்,  எனக்கும் உங்களுக்கும் ரத்த உறவு இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

மோடியின் முழுப் பேச்சையும் உன்னிப்பாகப் பார்த்ததில்,  பஞ் பியாரில் யாரையும் மாமா என்று மோடி எங்கும் சொல்லவில்லை.

பேச்சின் அந்த பகுதியை கேட்டபோது, ​​ அவர் ‘துவாரகா’ என்ற வார்த்தையை ‘துவாரிகா’ என்று உச்சரித்ததைக் கேட்டோம்,  அது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

PM Modi addresses a public meeting in Patiala, Punjab

உண்மையில், பிரதமர் மோடி துவாரகாவில் (இன்றைய குஜராத்) வசித்த நான்காவது பஞ்ச் பியாரே பாய் மோகம் சிங்கைக் குறிப்பிட்டார்.

முடிவு

தனது மாமா குரு கோவிந்த் சிங்கின் பஞ்ச் பியாரில் ஒருவர் தனது மாமா என்று பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் கூறவில்லை என்பது எங்கள் விசாரணையில் தெளிவாகிறது.  அவர் உண்மையில் குரு கோவிந்த் சிங்கின் ‘பஞ்ச் பியாரே’ எனப்படும் 5 சீடர்களில் ஒருவர் குஜராத்தின் துவாரகாவைச் சேர்ந்தவர் என்றும், இதனால் பஞ்சாப் மக்களுடன் தனக்கு இரத்த உறவு இருப்பதாகவும் கூறினார்.  எனவே, வைரலானது தவறானது.

 

Note : This story was originally published by ‘Logically Facts’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

மேகதாது அணை திட்டத்தை எதிர்ப்பதில் முனைப்புடன் செயல்படுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Vandhana

2026ல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியமைக்கும்

G SaravanaKumar

ரஷ்யாவிற்கு உதவும் எண்ணத்தை கைவிடுக – ஜி 7 நாடுகள் வலியுறுத்தல்

EZHILARASAN D

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading