நடிகர் மஞ்சு மோகன் பாபுவின் குடும்ப மோதல்களுக்கு KTR தான் காரணம் என மஞ்சு லட்சுமி தெரிவித்தாரா?

This News Fact Checked by ‘FACTLY’ நடிகர் மஞ்சு மோகன் பாபுவின் குடும்பத்தில் நிலவும் மோதல்களுக்கு பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி.ஆர் தான் காரணம் என நடிகை மஞ்சு லட்சுமி தெரிவித்ததாக ‘Way2News’…

Did Manju Lakshmi say that KTR is responsible for actor Manju Mohan Babu's family conflicts?

This News Fact Checked by ‘FACTLY

நடிகர் மஞ்சு மோகன் பாபுவின் குடும்பத்தில் நிலவும் மோதல்களுக்கு பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி.ஆர் தான் காரணம் என நடிகை மஞ்சு லட்சுமி தெரிவித்ததாக ‘Way2News’ செய்தி பதிவு வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மையை காணலாம்.

“திரைப்பட நடிகர் மஞ்சு மோகன் பாபுவின் குடும்பத்தில் நிலவும் மோதல்களுக்கு பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி.ஆர் தான் காரணம் என்று நடிகை மஞ்சு லட்சுமி ஊடகங்களுக்குத் தெரிவித்தார்” என ‘Way2News’ செய்தி வெளியிட்டுள்ளதாக பதிவு (இங்கேஇங்கே) ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வைரலான பதிவில் குறிப்பிட்டுள்ளபடி, ‘நடிகர் மோகன் பாபு குடும்பத்தில் ஏற்பட்ட மோதலுக்கு கே.டி.ஆர் தான் காரணம் என மஞ்சு லட்சுமி மீடியாக்களிடம் தெரிவித்தாரா?’ என்பதில் தகுந்த முக்கிய வார்த்தைகளை பயன்படுத்தி இணையத்தில் தேடியபோது, ​​மஞ்சு லட்சுமி இதுபோன்ற கருத்துகளை தெரிவித்ததாக நம்பத்தகுந்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

மேலும், இந்த செய்தியை ‘Way2News’ நிறுவனமும் வெளியிடவில்லை. இந்த வைரலான செய்தித் தொகுப்பை கவனமாகப் பார்த்தால், இந்தச் செய்தியை ‘Way2News’ வெளியிடவில்லை என்பது தெரியவரும். ஏனென்றால், பொதுவாக, வெளியிடப்படும் ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு தனிப்பட்ட எண்ணெழுத்து (ஆங்கில எழுத்துக்கள் மற்றும் எண்கள் அடங்கிய) குறியீடு இருக்கும். ‘Way2News’ வெளியிட்ட சில செய்திக் கட்டுரைகளை கீழே காணலாம்.

ஆனால் தற்போது பகிரப்பட்டுள்ள நியூஸ் கிளிப்பில் அப்படியொரு ஆல்ஃபா நியூமரிக் குறியீடு/வெப் லிங்க் இல்லை என்பதை பார்க்கலாம். இதன் அடிப்படையில், இந்த வைரலான செய்தி கிளிப்பை ‘Way2News’ வெளியிடவில்லை, மாறாக ‘Way2News’ லோகோவைப் பயன்படுத்தி தவறான தகவல்களைப் பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட செய்திக் கிளிப் என்ற முடிவுக்கு வரலாம்.

மேலும், இந்த செய்தி கிளிப் வெளியிடப்பட்ட பிறகு, டிசம்பர் 11, 2024 அன்று, ட்விட்டர் (எக்ஸ்) பதிவு (காப்பக பதிவு) வாயிலாக Way2News சார்பில் இந்த செய்தி போலியானது என பதிவிடப்பட்டுள்ளது. அந்த பதிவில், “இது Way2News ஆல் வெளியிடப்பட்ட கட்டுரை அல்ல. ஆனால் சில குழுக்கள் தவறான தகவல்களை எங்கள் வடிவத்தில் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் பரப்புகின்றன” என குறிப்பிடப்பட்டுள்ளது.

முடிவு:

இறுதியாக, நடிகர் மோகன் பாபு குடும்பத்தில் ஏற்பட்ட மோதல்களுக்கு கே.டி.ஆர் தான் காரணம் என மஞ்சு லட்சுமி மீடியாக்களிடம் கூறியதாக வெளியான செய்தியை ‘Way2News’ வெளியிடவில்லை. தங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட மோதல்களுக்கு கே.டி.ஆர் தான் காரணம் என மஞ்சு லட்சுமி கூறியதாக நம்பத்தகுந்த தகவல் இல்லை என உறுதி செய்யப்பட்டது.

Note : This story was originally published by ‘FACTLY and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.