நடிகர் விமலுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. நடிகர் விமல் தனது உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் களவாணி திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விமல் அதனை தொடர்ந்து வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா,
ஜன்னல் ஓரம், கலகலப்பு, மஞ்சப்பை உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.
நடிகர் விமலுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. பலரும் விமலை தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தனர்.
இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்டு நடிகர் விமல் விளக்கம்
அளித்துள்ளார்.
அதில் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. யாரோ தவறான தகவலை கிளப்பி விட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு எனக்கு லேசான இருமல் ஏற்பட்டது. அதற்காக மருத்துவமனை சென்றேன். இப்போது நான் நலமாக இருக்கிறேன் என்று விமல் அந்த விமல் வீடியோவில் தெரிவித்துள்ளார்.







