சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகல்!

15 வது ஐபிஎல் தொடர் மார்ச் 26ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கேப்டன் பதவியிலிருந்து விலகி, ஜடேஜாவிடம் அந்த பதவியை ஒப்படைப்பதாக தோனி முடிவு செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008 முதல்…

15 வது ஐபிஎல் தொடர் மார்ச் 26ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கேப்டன் பதவியிலிருந்து விலகி, ஜடேஜாவிடம் அந்த பதவியை ஒப்படைப்பதாக தோனி முடிவு செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008 முதல் ஆண்டு தோறும் 20 ஓவர்கள் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 2020ல் இப்போட்டியின் ஸ்பான்சரை டீரிம் 11 நிறுவனம் கைப்பற்றியிருந்தது. இதனையடுத்து கடந்த 2021ம் ஆண்டு ஸ்பான்சரை விவோ பெற்றிருந்தது.

இந்நிலையில் நடப்பாண்டும் இதே நிறுவனம் ஸ்பான்சராக நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டாடா நிறுவனம் முதன்மை ஸ்பான்சராக வந்துள்ளது. மேலும், இம்முறை ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் உட்பட 8 அணிகளோடு கூடுதலாக ஆமதாபத், லக்னவ் ஆகிய 2 அணிகள் இணைக்கப்பட்டிருகின்றன.

https://twitter.com/ChennaiIPL/status/1506920018097098752

இதனையடுத்து, இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூரில் நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, இந்த 15வது ஐபிஎல் தொடர் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐபிஎல்-ன் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 2 நாட்களில் ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகி, ஜடேஜாவிடம் அந்த பதவியை ஒப்படைப்பதாக தோனி முடிவு செய்துள்ளார். கேப்டன் பதவியை மட்டும் தான் கொடுத்திருப்பதாகவும், சிஎஸ்கே அணியில் விளையாடுவதை தொடர்வார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.