தீரன் சின்னமலை நினைவு நாள் – மு.க.ஸ்டாலின் மரியாதை!

தீரன் சின்னமலை பிரிட்டிஷாருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய விடுதலைப் போராளி என்று மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “ஆங்கிலேய ஆதிக்கத்தை அசரடித்த வீர வித்து தீரன் சின்னமலை நினைவு நாள்! எத்தனை முறை எத்தகு படைகளைக் கொண்டு தாக்கியும் வெற்றி கொள்ள முடியாத பெருவீரனாகப் போரிட்டவர் தீரன் சின்னமலை.

திப்பு சுல்தானுடன் கூட்டணி அமைத்து பிரிட்டிஷாருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய விடுதலைப் போராளி. நேரடியாக எதிர்கொள்ள இயலாத எதிரிகள் சூழ்ச்சியால் அவரைத் தூக்கிலிட்டாலும் அவர் புகழைத் தமிழ்நாடு போற்றிக் கொண்டே இருக்கும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.