முக்கியச் செய்திகள் தமிழகம்

டிஜிபி ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபியை பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முதலமைச்சர் நிகழ்ச்சியில் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சிறப்பு டிஜிபி மீது புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து, சிறப்பு டிஜிபி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார், மேலும், புகார் குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது. ராஜேஷ் தாஸ் மீது பெண்ணை மானபங்கப்படுத்துதல், பெண்கள் வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது சிபிசிஐடி.
மேலும் உயர் நீதிமன்றமும் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது முன்னதாக, உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, “பாலியல் புகார் கொடுக்க வந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியைத் தடுத்து நிறுத்திய காவல்துறைக் கண்காணிப்பாளர் ஒருவரை அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. ஆனால் பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபியை இதுவரை ஏன் பணியிடை நீக்கம் செய்யவில்லை”என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது, முன்னரே மாநில மனித உரிமை ஆணையமும் இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டிருக்கிறது.

காத்திருப்பு பட்டியலிலிருந்த போதே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், கனிமொழி தலைமையிலான திமுக மகளிர் அணியினர் ராஜேஷ் தாஸை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிசிஐடி நடத்திய விசாரணைக்குப் பின்னர் தற்பொழுது முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை தேர்தல் ஆணையம் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்துள்ளது: மத்திய அரசு

Mohan Dass

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள்

G SaravanaKumar

கோவை: கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து போராட்டம்!

Janani