ஏர் விஸ்தாரா நிறுவனத்துக்கு ரூ. 70 லட்சம் அபராதம் விதித்து, விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் வடகிழக்கு பகுதிக்கு குறிப்பிட்ட அளவிலான விமானங்கள் இயக்காததால் ஏர் விஸ்தாரா நிறுவனத்துக்கு ரூ. 70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டிஜிசிஏ அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏப்ரல் 2022இல் விதிகளை கடைப்பிடிக்காததால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஏர் விஸ்தாரா நிறுவனம் ஏற்கெனவே அபராதத்தை செலுத்தியுள்ளது என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து, விஸ்தாரா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக ஆர்டிஜி உடன் விஸ்தாரா இணக்கமாக உள்ளது. பாக்டோக்ரா விமான நிலையம் மூடப்படாததால் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், ஏப்ரல் 2022இல் தேவைப்பட்ட விமானங்களில் 0.01 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டது.
மேலும், 2017-2018-ம் ஆண்டு வடக்கு குளிர்காலத்தில் இருந்து நடைமுறைக்கு வந்த புதிய சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கை 2016-ன்படி ஏஎஸ்கேஎம்-களின் வர்த்தகமும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கடைசி நிமிட மாற்றங்களைச் செய்வதற்கான வழிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சட்டத்தை மதிக்கும் வகையில் விஸ்தாரா அபராதத்தை செலுத்தியுள்ளது என்றார்.
-ம.பவித்ரா