பழனி முருகன் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் ரோப்கார் மற்றும் மின்இழுவை ரயில் நிலையங்களில நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து‌ மலைக்கோவிலுக்கு சென்றனர். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம்…

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
இதனால் ரோப்கார் மற்றும் மின்இழுவை ரயில் நிலையங்களில நீண்ட வரிசையில்
பக்தர்கள் காத்திருந்து‌ மலைக்கோவிலுக்கு சென்றனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இன்றைய தினம்  விடுமுறை தினம் என்பதால் அதிக  அளவிலான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்தனர் .

பங்குனி மாதம் துவங்கியுள்ள நிலையில், பங்குனி உத்திரத்திருவிழா வருகிற
29ம்தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கஉள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.மலை மீது சென்று தண்டாயுதபாணி சுவாமியை வழிபட பக்தர்கள் ரோப் கார் மற்றும்
வின்ச் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பாத விநாயகர்
கோயில் முன்பு இருந்து படிப்பாதை வழியாக பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தீர்த்தக்
கலசங்களை சுமந்த படி மலை மீது சென்று சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்து வருவதற்கு கோயில் நிர்வாகம் ஏற்பாடுகள்
செய்துள்ளது. மேலும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக கூடுதலாக போலீசார் பாதுகாப்பு
பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.