கிருஷ்ண ஜெயந்தி – நாடு முழுவதும் உற்சாகக் கொண்டாட்டம்

பகவான் கிருஷ்ணர் அவதரித்த நாள் என்பதால் இன்றைய தினத்தை பக்தர்கள் நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த நாள் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என அழைக்கப்படுகிறது. கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு…

பகவான் கிருஷ்ணர் அவதரித்த நாள் என்பதால் இன்றைய தினத்தை பக்தர்கள் நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த நாள் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என அழைக்கப்படுகிறது.

கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணர் பிறந்த மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ணரும் ராதையும் விசேஷமாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தனர். ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோயிலுக்குச் சென்று ஸ்வாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

கேரளாவின் கோழிக்கோட்டில் கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீகிருஷ்ணர் ஊர்வலம் நடைபெற்றது. வீதி வீதியாக உலா வந்த கிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள் பாளித்தார்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி தினம் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ததோடு, கிருஷ்ணரின் பாடல்களைப் பாடியும் ஆடியும் மகிழ்ந்தனர்.

இதேபோல், மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள இஸ்கான் கோயிலிலும் பக்தர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்து கிருஷ்ண ஜென்மாஷ்டமியைக் கொண்டாடினர்.

குஜராத்தில் துவாரகாவில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள கன்பத்யார் கோயிலில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கிருஷ்ண ஜென்மாஷ்டமியை கொண்டாடினர்.

தலைநகர் டெல்லியிலும் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இங்குள்ள இஸ்கான் கோயிலுக்கு வருகை தந்த இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் எல்லிஸ், ஸ்ரீகிருஷ்ணருக்கு ஆரத்தி காட்டி வழிபாடு செய்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.