கொதிக்கும் எண்ணெய்யில் வெறும் கையால் வடை சுட்டு நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்!

விழுப்புரம் அருகே பிள்ளையார்குப்பத்தில் நடை பெற்ற பங்குனி உத்திர விழாவில் பக்தர்கள் மிளகாய் அபிஷேகம் செய்தும், கொதிக்கும் எண்ணெய் யில் வெறும் கையால் வடை சுட்டும் நேர்த்தி கடன் செலுத்தினர். விழுப்புரம், பிள்ளையார்குப்பத்தில் உள்ள…

விழுப்புரம் அருகே பிள்ளையார்குப்பத்தில் நடை பெற்ற பங்குனி உத்திர
விழாவில் பக்தர்கள் மிளகாய் அபிஷேகம் செய்தும், கொதிக்கும் எண்ணெய் யில் வெறும் கையால் வடை சுட்டும் நேர்த்தி கடன் செலுத்தினர்.

விழுப்புரம், பிள்ளையார்குப்பத்தில் உள்ள முருகன் கோயிலிலில் பங்குனி
உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. திருவிழாவினை முன்னிட்டு
கொடியேற்றத்துடன் துவங்கி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை
ஆகியவை நடை பெற்றன.

பங்குனி உத்திர விழாவினை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் தங்கள் மீது மிளாகய் அபிஷேகம் செய்து நேர்த்தி கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து 39-வது ஆண்டுகளாக பிள்ளையார்குப்பத்தில் பக்தர்கள், கொதிக்கும் எண்ணெய் சட்டியில் உள்ள வடைகளை வெறும் கையால் எடுத்தனர்.

மேலும், எண்ணெய் சட்டியில் வெறும் கையால் எடுக்கப்பட்ட வடை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் குழ்ந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் 50 ரூபாய் செலுத்தி வடையை பெற்று கொண்டனர்.

—ம. ஶ்ரீ மரகதம்
VLP MILAGAI ABISHIGAM visual in ftp

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.