கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்!

புதுக்கோட்டை மாவட்டம், மிரட்டு நிலையில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடை பெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த…

புதுக்கோட்டை மாவட்டம், மிரட்டு நிலையில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் பங்குனி
திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடை பெற்றது.

இதில் புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 25 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாடு, நடு மாடு, சிறிய மாடு என மூன்று பிரிவுகளாக போட்டி நடை பெற்றது.

பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 6 ஜோடி மாட்டு வண்டிகளும், நடு மாட்டு
வண்டியில் 8 ஜோடி மாட்டு வண்டிகளும், சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 11ஜோடி
மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டிக்கு 8 கிலோ மீட்டர் தூரமும், நடு மாட்டு வண்டிக்கு ஏழு கிலோ மீட்டர் தூரமும், சிறிய மாட்டு வண்டிக்கு 6 கிலோ மீட்டர் தூரமும் எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடை பெற்றது.

இந்த பந்தயத்தில் கலந்து கொண்ட மாட்டு வண்டிகள் சாலையில் துள்ளிக்குதித்து ஒன்றையொன்று‌ முந்தி சென்றன. மிரட்டு நிலை- புதுக்கோட்டை சாலையில் நடைபெற்ற போட்டியை காண்பதற்காக சாலை நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் போட்டியை கண்டு ரசித்தனர்.

மேலும் போட்டி நடைபெற்ற சாலையில் பேபர் பிளாக் கற்களால் சாலை
அமைக்கப்பட்டிருந்த நிலையில் நடு மாடு பிரிவில் ஒவ்வொரு மாட்டு வண்டிகள் கீழே விழுந்தது. இதையடுத்து, நடு மாட்டு வண்டியில் கீழே விழுந்த புதுக்கோட்டை மஞ்சள் கரையை சேர்ந்த பதினெட்டாம் படி கருப்பர் மாட்டு வண்டி பின்னர் எழுந்து பந்தய இலக்கை எட்டி முதல் மாடாக வெற்றி பெற்றது. மேலும் இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் நான்கு இடங்களை பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கப் பணம் மற்றும் வெற்றி கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன.

—-ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.