திருப்பதி மலையேறும் பக்தர்களுக்கு மீண்டும் இலவச தரிசன டோக்கன்!

திருப்பதியில் இன்று அதிகாலை முதல் திருப்பதி மலை அடிவாரம், ஸ்ரீவாரி மெட்டு ஆகிய பகுதிகளில் பாதயாத்திரையாக மலையேறும் பக்தர்களுக்கு, இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிப்பிரி, சீனிவாச மங்காபுரம்…

திருப்பதியில் இன்று அதிகாலை முதல் திருப்பதி மலை அடிவாரம், ஸ்ரீவாரி
மெட்டு ஆகிய பகுதிகளில் பாதயாத்திரையாக மலையேறும் பக்தர்களுக்கு,
இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன.

திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிப்பிரி, சீனிவாச மங்காபுரம் சமீபத்தில்
இருக்கும் ஸ்ரீவாரி மெட்டு ஆகிய பகுதிகளிலிருந்து, திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக
செல்லும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் என்ற பெயரில் , இலவச தரிசன
டோக்கன்கள் கொரோனாவுக்கு முன் வழங்கப்பட்டு வந்தன. அதன் பின் , திவ்ய தரிசன
டோக்கன் அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பக்தர்களின் தொடர் வேண்டுகோளுக்கு இணங்க இன்று முதல் நடந்து
மலை ஏறி செல்லும் பக்தர்களுக்கு , 15,000 டோக்கன்களை தினமும் வழங்க தேவஸ்தான
நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி இன்று அதிகாலை முதல் , அலிப்பிரி வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு தினமும் பத்தாயிரம் டோக்கன்களும், ஸ்ரீவாரி மெட்டு பகுதி வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு தினமும் 5000 டோக்கன்களும் வழங்கப்படுகின்றன.

— கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.