குளித்தலையில் இருந்து, விராலிமலை ஆறுமுகப் பெருமானுக்கு, 108 காவடி எடுத்து வந்து, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
திருச்சி அருகே மதுரைக்குச் செல்லும் வழியில் விராலி மலையில் ஆறுமுகப் பெருமான் எழுந்தருளி வருகிறான். இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மையான இந்தக் கோயிலில் பத்து அடி உயரத்தில் முருகப் பெருமான் எழுந்தருளி வருவது தனிச்சிறப்பாகும்.சிறந்த வரப் பிரசாதியான இந்த ஆறுமுகப் பெருமானைத் தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில், கரூர் மாவட்டம், குளித்தலையைச் சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பால் குடம், தீர்த்தக் குடம், காவடி எடுத்துவந்து நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம். அதன்படி, எட்டு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் 108 காவடிகள், தீர்த்தக் குடம், பால்குடம் எடுத்துச்சென்று விராலிமலை ஆறுமுகப் பெருமானுக்கு வேண்டுதலை நிறைவேற்றினர்.
- பி.ஜேம்ஸ் லிசா