மயிலாடுதுறையில் திருஞானசம்பந்தர் இயற்றிய தேவார திருப்பதிகத்தினை
மத நல்லிணக்கத்துடன் அனைத்து சமூகத்தினரும் இணைந்து பாராயணம் செய்தனர். 
தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான, சீர்காழி திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற மே 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை ஒட்டி
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் இயற்றிய “ஒரு வாயினை” என தொடங்கும் தேவாரப் திருப்பதிகத்தினை 1 கோடி முறை ஓதுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது,
மயிலாடுதுறை மாவட்டம் ஜெயின் சங்கக் கட்டடத்தில் அனைத்து மதத்தினரும் இணைந்து சமூக நல்லிணக்கத்துடன் “ஒருருவாயினை “என தொடங்கும் தேவாரப் பதிபகத்தின் பாடல் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி பங்கேற்றனர். 
இதை தொடர்ந்து தருமபுரம் ஆதீனக்கட்டளை ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள் பாராயணம் செய்யும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு பாராயணம் செய்தனர். இந் நிகழ்வு சமூக நல்லிணக்கத்திற்கு ஒர் எடுத்துக்காட்டாக விளக்கியது.
அனைத்து மதத்தினரும் பங்கேற்ற தேவாரம் பாராயணம்!
மயிலாடுதுறையில் திருஞானசம்பந்தர் இயற்றிய தேவார திருப்பதிகத்தினை மத நல்லிணக்கத்துடன் அனைத்து சமூகத்தினரும் இணைந்து பாராயணம் செய்தனர். தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான, சீர்காழி திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற மே 24 ஆம்…






