ஜப்பானில் பிரமாண்டமாக வெளியாகிறது ‘தேவரா’ திரைப்படம்!

தேவரா திரைப்படம் ஜப்பானில் அடுத்த ஆண்டு மார்ச் 28-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பின் கொரட்டலா…

'Devara' - Released in Japan Film Crew Announcement!

தேவரா திரைப்படம் ஜப்பானில் அடுத்த ஆண்டு மார்ச் 28-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பின் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ‘தேவரா’ வெளியாகியுள்ளது. இதில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் மக்களிடம், பெறும் வரவேற்பை பெற்றது. இறுதியில் உலகம் முழுவதும் ரூ.500 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்தது. இப்படத்தின் மிகப்பெரிய வரவேற்பை அடுத்து தற்போது ஜப்பானிலும் வெளியாக உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் 28-ம் தேதி ஜப்பானில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி துவங்குகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.