முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

21 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு நடந்த புகழ்பெற்ற கோயில்!

ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சிக்கோட்டை வேதகிரி மலையில் அமைந்துள்ள
வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் 21 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற மஹா
கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே 120 அடி உயரம் கொண்ட ஊராட்சிக்கோட்டை வேதகிரி
மலையில் வேதநாயகி உடனமர் ஸ்ரீ வேதகிரீஸ்வரர்,‌ஸ்ரீ தேவி பூதேவி உடனமர் ஸ்ரீ
வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீ வேத வியாசர் உடனமர் வேத நாராயணன் திருக்கோவில்
அமைந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நான்கு வேதங்களும் இந்த மலையில் வேத வியாசரால் பகுத்தெடுக்கப்பட்டதால் வேதகிரி
என்ற திருநாமம் பெற்று பழமை வாய்ந்த கோவிலாக உள்ளது. திருக்கோவில்களின் இக்கோவிலில் இருபத்தி ஒரு வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நடத்த இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதையடுத்து கோவில் கோபுரங்கள் புனரமைக்கப்பட்டன. தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் சம்ப்ரோக்ஷணம் விழா இன்று நடைபெற்றது. முன்னதாக
பவானி காவிரி அமுத நதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் கூடுதுறை ஆற்றில் இருந்து
புனித நீர் எடுத்து வரப்பட்டு சிவாச்சாரியார்கள் மற்றும் ஆச்சாரியர்
பெருமக்கள் வேத மந்திரங்கள் முழங்க நான்கு கால யாக வேள்வி நடத்தப்பட்டது.

வேள்விகள் நிறைவடைந்து பின்னர் கலசங்கள் மற்றும் கருவறை தெய்வங்களுக்கு புனித
நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ வேதகிரீஸ்வரர், வரதராஜபெருமாள், வேதநாராயண சுவாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அருட் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த கும்பாபிஷேக விழாவில் ஈரோடு நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த
ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆயிரம் படிக்கட்டுகள் கொண்ட மலையில் நடந்து சென்று
கோபுர தரிசனம் செய்து பெருமாளை வழிபாடு செய்தனர்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்வார்: அமைச்சர் சேகர்பாபு

Halley Karthik

’திமுகவின் நிலைப்பாடு – மாநில சுயாட்சி’ – திமுக செய்தித்தொடர்புச் செயலாளர்

Arivazhagan Chinnasamy

இபிஎஸ் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் குறித்து பேசவில்லை -ஜெயக்குமார்

G SaravanaKumar