மயிலாடுதுறையில் தனியார் தொடக்கப்பள்ளி நிர்வாகத்தினர் ஆதரவற்ற முதியோர்களுடன் பள்ளி மாணவர்களை அழைத்து வந்து குடும்ப திரைப்படமான “வாரிசு” திரைப்படத்தைக் கண்டு ரசித்தனர்.
மயிலாடுதுறை அருகே லட்சுமி புரத்தில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போதைய தலைமுறையினர் பெரும்பாலானோர் கூட்டுக்குடும்பம் என்றால் என்னவென்றே தெரியாத வகையில் வளர்ந்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவர்களுக்கு உறவுகளின் மேன்மையைத் தெரியவைக்கும் விதமாகப் பள்ளி நிர்வாகம், குடும்ப திரைப்படமான விஜய் நடித்த பொங்கலுக்கு வெளிவந்த வாரிசு திரைப்படத்தை ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தங்கி வசிக்கும் முதியோர்களுடன் தொடக்கப்பள்ளி குழந்தைகளைப் பள்ளி வாகனத்தில் அழைத்து வந்து மயிலாடுதுறையில் உள்ள திரையரங்கு ஒன்றில் திரைப்படத்தைக் கண்டு ரசித்தனர்.
இப்பள்ளியில் 4 மற்றும் 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 60 பேரை, பள்ளியின் அருகில் செயல்படும் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தங்கி வசிக்கும் 15க்கும் மேற்பட்ட மூதாட்டிகளையும் அழைத்து வந்து வாரிசு திரைப்படத்தின் மூலம் குழந்தைகள் குடும்ப உறவுகளின் மாண்பினையும், கூட்டுக்குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் தெரிந்து கொள்வதோடு, தங்களது குடும்பத்தினரால் கைவிடப்பட்ட மூதாட்டிகளும் குழந்தைகளோடு இணைந்து வெளியில் வந்ததால் மகிழ்ச்சியில் திளைத்தனர். இவர்களில் பலர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு திரைப்படம் பார்ப்பதாகவும் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.