முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

அப்பாவுடன் இணைந்து நடிக்க ஆசை – துல்கர் சல்மான்

தந்தையுடன் இணைந்து நடிக்க ஆசை உள்ளதாவும், எப்போது அந்த ஆசை நிறைவேறும் என தந்தை தான் சொல்ல வேண்டும் என துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

 

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள சீதா ராமம் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. அப்போது, மேடையில் பேசிய நடிகர் துல்கர் சல்மான், தனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம் சீதா ராமம் என தெரிவித்தார். மதன் கார்கி நிறைய முயற்சி செய்து இந்த படத்தை தமிழில் கொண்டு வந்துள்ளார். நான் தான் இந்த படத்திற்கு டப்பிங் செய்துள்ளேன்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை சீதா மகாலட்சுமி என்று தான் சொல்லுவேன், சீதா ராமம் என்று சொல்ல மாட்டேன் என்றார். காதல் கதைகளில் நடித்து சோர்வாகி விட்டது என்பதால், இனி காதல் சம்பந்தமான கதைகளை பண்ண மாட்டேன் என தெரிவித்தார். ராஷ்மிகா தான் அனுமானாக இருக்கலாம். இரண்டு நேரடி தமிழ் படங்களில் கையெழுத்து இட்டுள்ளேன் என கூறினார்.

 

கதை நல்லா இருந்தால் மல்டி ஹீரோ கதைகளை வைத்து படம் பண்ண தயார் என்றும் துல்கர்சல்மான் கூறினார். மேலும் அப்பா மம்முட்டியுடன் சேர்ந்து நடிக்க ஆசை உள்ளது என்ற அவர், நானும் நிறைய முறை நடிக்க கேட்டுள்ளேன் என்றும் எப்போது என்று அப்பா தான் சொல்ல வேண்டும் என்றும் கூறினார்.

– தினேஷ் உதய்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்: முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

Web Editor

இன்ஸ்டா பழக்கம்.. நடுரோட்டில் கல்லூரி மாணவி சரமாரி குத்திக் கொலை.. காதலன் வெறிச்செயல்

Gayathri Venkatesan

நீட் தேர்வு தோல்வி பயம்; மாணவியின் விவரீத முடிவு

G SaravanaKumar