சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் கொரோனாவால் உயிரிழந்தற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் அஷிஸ் யெச்சூரி. இவர் சென்னையில் உள்ள இதழியல் கல்லூரியில் பயின்று, டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, குருக்கிராமில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கே முறையான சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் இன்று காலை 5.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது மரணதிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சீதாராம் யெச்சூரியின் மகன் மரணச் செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மகனை இழந்துவாடும், யெச்சூரியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டார்.







