தேங்காய் விலை வீழ்ச்சியைக் கண்டித்து தாராபுரத்தில் நூதன போராட்டம்!

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தேங்காய் விலை வீழ்ச்சியை கண்டித்து, சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள தாராபுரத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞரணி…

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தேங்காய் விலை வீழ்ச்சியை
கண்டித்து, சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள தாராபுரத்தில் கட்சி சார்பற்ற
தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞரணி சார்பில், மாநிலத்
தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில், குண்டடம் ராசு தாராபுரம் முன்னிலை
அண்ணா சிலை அருகே சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டத்தில், 100 க்கும்
மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டனர்.

அதில் கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க வலியுறுத்தி, தமிழக அரசின்
கவனத்தை ஈர்க்கும் வகையில், கடந்த 1-ந்தேதி முதல் சிதறு தேங்காய் உடைத்து
ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 25-வது நாளாக தாராபுரம்
அண்ணா சிலை முன்பு, சிதறு தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்
கலந்து கொண்டவர்கள் கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க கோரியும்,
தமிழகத்தில் கள்ளுக்கு தடையை நீக்கி கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து முழக்கங்களை எழுப்பினர்.

கு. பாலமுருகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.