பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தம் செய்யக்கோரி, சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட செவிலியர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். 2015-ம் ஆண்டு மருத்துவ தேர்வு வாரியத்தின் தேர்வில் வெற்றி பெற்ற 12 ஆயிரம் செவிலியர்கள் தொகுப்பூதிய செவிலியர்களாக பணியாற்றி…

பணி நிரந்தம் செய்யக்கோரி, சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட செவிலியர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.

2015-ம் ஆண்டு மருத்துவ தேர்வு வாரியத்தின் தேர்வில் வெற்றி பெற்ற 12 ஆயிரம் செவிலியர்கள் தொகுப்பூதிய செவிலியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கக் கோரி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் அருகில் 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட செவிலியர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

மருத்துவ தேர்வு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நிரந்தரம் செய்யப்படாத செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 300 க்கும் மேற்பட்டோர் ஓமந்தூரார் மெட்ரோ அருகே அண்ணா சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று 2015 ஆம் ஆண்டில் இருந்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி
வருவதாகவும், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல காலமாக செவிலியர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மெட்ரோ அருகே 300க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒன்றுகூடி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட செவிலியர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது
செய்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செவிலியர் காந்திமதி, கடந்த 2015ம் ஆண்டு முதல் அரசு நடத்தக்கூடிய தேர்வில் வெற்றி பெற்றும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறோம், இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது திமுக அரசு தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி எங்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தெரிவிக்க வேண்டும்.

காவல்துறையினர் எங்களை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது. MRB மூலம் தற்காலிகமாக பணிக்கு வந்தவர்களை மட்டுமே பணி நிரந்தரம் செய்ய முடியும். பணி நிரந்தரம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. யாருடைய தூண்டுதலின் பேரிலும் வெயிலில் உடலை வருத்திக்கொண்டு செவிலியர்கள் போராட வேண்டாம். செவிலியர்களுக்கு அரசு துணை நிற்கும் என்று தெரிவித்தார்.

மேலும், நிதி ஆதாரத்தை கணக்கில் கொண்டு செவிலியர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் செவிலியர்களின் பிரதிநிதிகளிடம் வாக்குறுதி அளித்துள்ளார். 2020ம் ஆண்டு வரை பணியில் சேர்ந்தவர்கள் 5 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு வழங்க வழிவகை உள்ளதா என கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனவும் பேச்சு வார்த்தை போய்க்கொண்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.