அனுமதி இல்லாமல் இயங்கிய 3 சாயப்பட்டரைகள் இடித்து அகற்றம்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டாரப்பகுதியில் அனுமதியில்லாமல் சாயப்பட்டரைகள் இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சியருக்குப் புகார் வந்தது. இதனையடுத்து சாயப்பட்டரைகள் இடித்து அகற்றப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அனுமதியில்லாமல் சாயப்பட்டரைகள் இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சியருக்குத்…

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டாரப்பகுதியில் அனுமதியில்லாமல் சாயப்பட்டரைகள் இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சியருக்குப் புகார் வந்தது. இதனையடுத்து சாயப்பட்டரைகள் இடித்து அகற்றப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அனுமதியில்லாமல் சாயப்பட்டரைகள் இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சியருக்குத் தொடர்ச்சியாகப் புகார்கள் வந்து கொண்டே இருந்தது. இதனையடுத்து அதிகாரிகள் நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ராசிபுரம் பகுதியில் மூன்று சாயப்பட்டரைகள் அனுமதியில்லாமல் இயங்கி வருவது கண்டறியப்பட்டது.

விசாரித்ததில் அந்த சாயப்பட்டரைகள் ராமச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான இரண்டு சாயப்பட்டரைகளும், சகுந்தலா என்பவருக்குச் சொந்தமான 1 சாயப்பட்டரையும் இயங்கி வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து உடனடி நடவடிக்கையாகப் பொறியாளர் ரவிக்குமார் தலைமையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் 3 சாயப்பட்டறைகளையும் இடித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இனிமேல் சாயப்பட்டரைகள் அனுமதியில்லாமல் இயங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.