தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களைத் தீரமுடன் எதிர்கொண்ட போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்தி ஊர்வலமாக வந்தது, இதனை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர்.
தமிழ்நாட்டில் குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் போது சுதந்திரத்திற்காகப் போராடிய தமிழ்நாட்டு வீரர்களின் அலங்கார ஊர்தி வலம் வந்தது. அந்த ஊர்திகள் அனைத்தும் தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களுக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அருவித்திருந்தார்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் மதுரை மாநில நெடுஞ்சாலையில் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களைத் தீரமுடன் எதிர்கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள்,வேலுநாச்சியார், பூலித்தேவன்,ஒண்டி வீரன் உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களின் பங்களிப்பைப் பெருமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி வாகனம் வந்தடைந்தது வருகை புரிந்தது.
அலங்கார உறுதியை சமூக நலன் துறை அமைச்சர் கீதா ஜீவன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் , ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர். பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் விடுதலை வீரர்களின் உருவம் தாங்கிய அலங்கார ஊர்தியை ஆர்வத்துடன் பார்வையிட்டனர். மேலும் கூட்டம் கூட்டமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பள்ளி மாணவர்கள் அலங்கார ஊர்தியுடன் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.







