எழுத்தாளர் பூமணி மறைவு – நயினார் நாகேந்திரன் இரங்கல்…!

எழுத்தாளர் பூமணி மறைவிற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழ் இலக்கிய உலகின் தனித்துவமான படைப்பாளியும், கரிசல் மண்ணின் வாழ்வியலையும் மனித உணர்வுகளையும் தனது எழுத்தின் வழியே காலத்திற்கும் அழியாத ஆவணங்களாகப் பதித்த சாகித்திய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் திரு. பூமணி அவர்களின் மறைவுச் செய்தி ஆழ்ந்த துயரத்தையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.

எளிய மனிதர்களின் வாழ்வை அசாதாரண இலக்கிய உயரத்திற்கு உயர்த்திய அவரது எழுத்து, தமிழ் மொழியின் பெருமையையும் செழுமையையும் உலகறியச் செய்தது. காலம் கடந்தும் வாசகர்களின் சிந்தனையில் நிலைத்திருக்கும் அரிய படைப்புகளை விட்டுச் சென்றுள்ள அவர், தமிழ் இலக்கிய வரலாற்றில் என்றும் அழியாத தடம் பதித்திருப்பார்.

அவரது மறைவு தமிழ் இலக்கியத்திற்கும், படைப்புலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், எண்ணற்ற வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் மனமார்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரது இலக்கியப் படைப்புகளும் சிந்தனைகளும் தலைமுறைகள் பலவற்றிற்கு வழிகாட்டும் ஒளியாக என்றும் நிலைத்திருக்கும். ஓம் சாந்தி!” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.