தங்கம் விலை சர்வதேச பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப மாற்றம் கண்டு வருகிறது. இதனிடையே கடந்த 11-ம் தேதி கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 300-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 400-க்கும் விற்கப்பட்டது.
நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 300-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,200-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,05,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




