டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – நியூஸ்7 தமிழ் கள ஆய்வு!

டெல்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான தண்ணீர் பஞ்சத்தால்,  அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.  ஹரியாணா மாநிலத்தில் இருந்து டெல்லி மாநிலம் வழியாக ஓடும் யமுனை நதியிலிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு…

டெல்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான தண்ணீர் பஞ்சத்தால்,  அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். 

ஹரியாணா மாநிலத்தில் இருந்து டெல்லி மாநிலம் வழியாக ஓடும் யமுனை நதியிலிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.  தலைநகர் டெல்லி பகுதியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.  ஹரியாணாவில் ஆளும் பாஜக அரசு,  டெல்லி மாநிலத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை குறைத்து விட்டதே இதற்கான காரணம் என ஆளும் ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது.

டெல்லியில் ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், இனி ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படும் என மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் அதிஷி  முன்னதாக அறிவித்திருந்தார்.  இதையடுத்து மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனிடையே குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் குடிநீரை வீணாக்காமல் இருக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இதன் ஒரு பகுதியாக குடிநீரை வீணாக்கினால் அவர்களுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

கார் கழுவுதல், வீ டுகளில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விடுதல்  போன்றவற்றிற்கு குடிநீரை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.  இந்த நிலையில்,  டெல்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான தண்ணீர் பஞ்சத்தால்,  அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.  மக்கள் காலி குடங்களுடன் தண்ணீருக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லி இருந்து நமது செய்தியாளர் வசந்தி அளித்த நேரடி தகவலின் முழு வீடியோவை காண…..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.