ஜூன் 5-ல் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

ஜூன் 5 ஆம் தேதி 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால்  இன்றுமுதல் வரும் ஜூன் 6 ஆம்…

ஜூன் 5 ஆம் தேதி 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால்  இன்றுமுதல் வரும் ஜூன் 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மேலும் இன்றும், நாளையும் நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலூர், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் ஜூன் 5 ஆம் தேதி கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.