முக்கியச் செய்திகள் இந்தியா

குறைந்தது கொரோனா பாதிப்பு – கட்டுப்பாடுகளை தளர்த்திய டெல்லி

கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளதைத் தொடர்ந்து தேசிய தலைநகர் டெல்லியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் டெல்லியில் தொற்று பாதிப்பை தடுக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக கடைகள், உணவகங்கள், விடுதிகள் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொற்று பாதிப்பு குறைந்ததையடுத்து கடைகளுக்கான நேரக்கட்டுப்பாடுகள் திரும்பப்பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 23 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் புதிதாக 19 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. தொற்று பாதிப்பு விகிதமானது 0.03 சதவிகிதமாக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 430ஆக உள்ளது என முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் டெல்லியில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 28,935 ஆக பதிவாகியது. தொற்று பாதிப்பு விகிதமானது 35 சதவிகிதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

கேரளாவில் ஒரே நாளில் 43,529 பேருக்கு கொரோனா!

Halley karthi

கொரோனா பரவலை தடுப்பது சவாலாக இருக்கிறது : சுகாதாரத்துறை செயலாளர்!

Gayathri Venkatesan

குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் எது? வழக்கறிஞர் அஜிதா பதில்!