டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் உள்ள நிலையில் வீட்டில் அவர் தனிமைப்படுத்திக்…

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் உள்ள நிலையில் வீட்டில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. நாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் ஓமிக்ரான் பாதிப்பு அதிகம் இருக்கிறது. ஓமிக்ரான் பாதிப்பில் டெல்லி 2-வது இடத்தில் உள்ளது.

டெல்லியில், ஏற்கனவே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள், பியூட்டி பார்லர்கள், ஜிம்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. திரையரங்குகள், உணவகங்கள் உள்ளிட்டவை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.