கொல்கத்தாவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு அவரின் தாயின் கருப்பையை வரும் ஜனவரி மாதம் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு பொருத்தப்பட உள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்காத்தாவை சேர்ந்த 28 வயதான இளம் பெண் ஒருவர் கருப்பை இல்லாமல் பிறந்துள்ளார். இதையடுத்து இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவரின் தயாரின் கருப்பையை இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து வரும் 2023ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி கொல்கத்தாவில் அந்த இளம்பெண்ணின் தயாரின் கருப்பையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் இளம் பெண்ணுக்கு பொருத்தவுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து மருத்துவர் சுகாஷ் பிஷ்வாஸ் கூறுகையில், கொல்கத்தாவில் உள்ள ஒரு இளம்பெண்ணுக்கு அவரின் தயாரின் கருப்பை வரும் ஜனவரி மாதம் பொருத்தப்பட உள்ளது. இது இந்தியாவில் நடைபெறும் 12வது கருப்பை மாற்று அறுவை சிகிச்சையாகும். ஆனால் மேற்குவங்கத்தில் நடைபெறும் முதல் கருப்பை அறுவை சிகிச்சை இதுவாகும் என கூறினார்.
அக்டோபர் 2022ல் வெளியான ஒரு ஆய்வு அறிக்கையின்படி, கருப்பை மாற்று அறுவை சிகிச்சையின் முடிவில் பெண்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை எடுத்துரைத்துள்ளது. ஒரு குழந்தையை சுமக்கும் வாய்ப்பு, செயலிழந்த கருப்பையினாலோ அல்லது இல்லாத ஒன்றினாலோ உருவாகும் மன உளைச்சலை, ஆழ்ந்த தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபடுவது அவர்களின் மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ளதாக தெரியவந்துள்ளது.