முக்கியச் செய்திகள் சினிமா

ரன்வீர் பிறந்தநாளுக்கு தீபிகாவின் நடனப் பரிசு

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் பிறந்தநாளை அவரது மனைவி தீபிகா படுகோன், கணவருடன் நடனமாடி கொண்டாடியுள்ளார்.

ரன்வீர் சிங்கிற்கு இன்று 36-வது பிறந்தநாள். இந்நிலையில், நடிகை தீபிகா படுகோன் தனது கணவர் ரன்வீர் சிங்குடன் நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில் இருவரும் யஷ் ராஜ் முக்தே இசையமைப்பில் ஷாஹனாஸ் கில் பாடிய பாடலுக்கு நடனமாடியிருந்தனர்.

 

View this post on Instagram

 

A post shared by Deepika Padukone (@deepikapadukone)

மேலும், அந்த வீடியோவின் தலைப்பில் உங்கள் பிறந்த நாள் என்பதால் சமாதானம் செய்கிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனக்கு மிகவும் பிடித்த நபர் நீங்கள் என ரன்வீர் சிங்கை டேக் செய்துள்ளார். உடனடியாக இந்த வீடியோவிற்கு இசையமைப்பாளர் யஷ் ராஜ் முக்தே இதுவொரு முக்கிய நாள் என கமெண்ட் செய்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

இதனிடையே ரன்வீர் சிங்கின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், இயக்குநர் கரண் ஜோகர் இயக்கத்தில் ரன்வீர் சிங் மற்றும் ஆல்யா பட் இணைந்து நடித்து வரும் Rocky Aur Rani Ki Prem Kahani படத்தின் மோசன் போஸ்டரை வெளியிட்டார். இதை பகிர்ந்த ரன்வீர் சிங், எனது பிறந்தநாளில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. படம் 2022ல் திரைக்கு வரும் என தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

கொரோனாவால் உயிரிழந்தவர் உயிருடன் வந்தாரா? ஆந்திராவில் பரபரப்பு!

தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த ம.நீ.ம கட்சியால்தான் முடியும்: ச.மீ. ராசகுமார்!

Halley karthi

போதை ஆசாமியை பிடிக்க முயன்ற காவலருக்கு கத்தி குத்து

Saravana Kumar