முக்கியச் செய்திகள் தமிழகம்

சைக்கிள் பயணம்…இளநீர் விற்கும் பாட்டியிடம் அன்புருக பேச்சு…மக்களின் முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டபோது, மிகுந்த உரிமையோடு பேசியதாக, தேவகி எனும் அம்மையார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரான பின்னர் முதல் முறையாக மு.க.ஸ்டாலின், நேற்று முன் தினம், கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவளத்தில் ஆரம்பித்து மாமல்லபுரம் வரை சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார். அப்போது, கோவளத்தில் உள்ள ஒரு டீக்கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தினார். அதன் பின், அந்த கடையின் உரிமையாளரின் தாய் தேவகியிடம் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய தேவகி, முதலமைச்சரான பின்பும், எவ்வித கர்வமும் இன்றி, மு.க.ஸ்டாலின் உரிமையோடு நலம் விசாரித்தார் எனவும், இந்த சந்திப்பு, தங்கள் ஊரில் உள்ள அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

சேலம் மாணவருக்கு கொரோனா; அனைத்து பள்ளிகளிலும் பரிசோதனை தீவிரம்!

Jayapriya

“அதிமுக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்”:எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Halley karthi

நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 29-ம் தொடக்கம்; மக்களவை செயலகம் அறிவிப்பு!

Saravana