ராமநாதபுரம் அருகே மாயமான மீனவர் கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா முள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் பால்கண்ணன். இவர் மாயமான நிலையில் இதுகுறித்து அவரது தந்தை பால்செல்வம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து பால்செல்வம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மீனவர் பால்கண்ணன் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக பால்துரையின் சடலத்தை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.







