பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தனது சமூக வலைதள பக்கத்தில் உள்ள பதிவுகள் அனைத்தையும் டெலிட் செய்துள்ளார்.
முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பவர். நிறைய போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 52 மில்லியனுக்கும் அதிகமான Followers இருக்கிறார்கள். இந்நிலையில் அவர் 2020ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தனது சமூக வலைதள பக்கங்களில் உள்ள பதிவுகள் அனைத்தையும் டெலிட் செய்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது அவரது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. பதிவுகளை டெலிட் செய்ததற்கான காரணம் குறித்து அவர் ஏதும் வாய் திறக்கவில்லை. ஆனால் அதன்பிறகு ஆடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டில் நாம் அனைவரும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஆண்டு அனைவரும் நல்ல உடல்நலத்துடன் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.