நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
புத்தாடை உடுத்தியும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் மக்கள் உற்சாகமாக தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். புதுமணத் தம்பதிகள் தங்களது தலைதீபாவளியை குடும்பதினரோடு மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.
சிறுவர்கள் வீட்டு வாசல்களில் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். மேலும் தீபாவளியையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் குடும்பத்தோடு கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.
ஒரு சில இடங்களில் மழை குறிக்கிட்டாலும் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இனிப்புகள் வழங்கி ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.
இதனிடையே, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்த தீபத்திருநாள் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, நல்ல அதிர்ஷ்டத்தை தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.







