முக்கியச் செய்திகள் சினிமா

வெளியானது “அண்ணாத்த” – ரசிகர்கள் கொண்டாட்டம்

வெளியானது “அண்ணாத்த” கொட்டும் மழையிலும் ரசிகர்கள் கொண்டாட்டம் ‘அண்ணாத்த’ படத்தின் முதல் காட்சி பல்வேறு திரையரங்கங்களில் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

இப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்து உள்ளார். ரஜினிகாந்தின் 168வது படம் அண்ணாத்த என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் முதல் காட்சி பல்வேறு திரையரங்கங்களில் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. ரஜினி ரசிகர்கள் பலரும் பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சென்னையில் கொட்டும் மழைக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தை காண திரளான ரசிகர்கள் மேள தாளங்களுடன், பட்டாசுகளை வெடித்து திரையரங்குகள் முன் திரண்டனர்.

Advertisement:
SHARE

Related posts

முதலமைச்சர் படம் இல்லாத நல்லாசிரியர் விருது சான்றிதழ்

Saravana Kumar

பல்கலைக்கழகங்களில் முறைகேடுகளை விசாரிக்க குழு: அமைச்சர் பொன்முடி

Ezhilarasan

இந்தியாவில் சற்று அதிகரித்த கொரோனா தொற்று

Halley karthi