கேரள மாநிலம் கோழிக்கோடு வடகரையைச் சேர்ந்தவர் ஷிம்ஜிதா முஸ்தபா. இவர் சில நாடக்ளுக்கு முன் தனது இன்ஸ்டாபக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பேருந்தில் ஆண் ஒருவர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். குற்றம் சாட்டப்பட்ட நபர் கோழிக்கோடு கோவிந்தபுரத்தைச் சேர்ந்த தீபக் ஆவார். 42 வயதான தீபக் தனியார் ஆடை நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். இந்த காணொளி ஒரே நாளில் பல லட்சம் பார்வைகளைப் பெற்றது. மேலும் அதைப் பார்த்த பலரும், தீபக்கிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களைப் பதிவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 18 ஆம் தேதி காலையில், தீபக் தனது வீட்டிலுள்ள தன்னுடைய அறைக்குள் இறந்த நிலையில் கண்டறியப்பட்டார். சமூக ஊடகங்களில் தன்னைப் பற்றி காணொளியில் பரவிய தகவல்களால் தீபக் உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தீபக்கின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரையடுத்து உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த ஷிம்ஜிதா கடந்த ஜனவரி 21 தேதி கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் ஷிம்ஜிதா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.







