முக்கியச் செய்திகள்

பள்ளிகளில் தமிழ் பாடவேளையை குறைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

பள்ளிகளில் தமிழ் பாடவேளைகளைக் குறைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடவேளைக் குறிப்பில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு தமிழ், ஆங்கிலம் 7 பாடவேளைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 6ஆக குறைக்கப்பட்டுள்ளது. சமூக அறிவியல் பாடத்திற்கான பாடவேளை ஒன்று அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், பள்ளிகளில் தமிழ் பாடவேளைகளைக் குறைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 6 – 10 ஆம் வகுப்புகளுக்கான தமிழ் மொழிப் பாடத்திற்கான பாடவேளைகளின் எண்ணிக்கை ஏழிலிருந்து ஆறாக குறைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகளில் தமிழ்ப் பாடத் தேர்ச்சி விகிதம் குறைந்து வரும் வேளையில், இந்த முடிவு மிகவும் தவறானதாகும். வாரத்திற்கு ஒரு பாடவேளை நீதிபோதனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க, தேவையான நடவடிக்கை. அதற்காக ஆங்கில பாடவேளையை குறைத்ததுடன் நிறுத்தியிருக்கலாம். தமிழ் பாடவேளையையும் குறைத்திருக்கத் தேவையில்லை. அது தமிழுக்குச் செய்யும் அவமரியாதை.

எனவே, தமிழ் பாடவேளையை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும். முன்பிருந்தவாறே வாரத்திற்கு 7 பாடவேளைகளை தமிழுக்கு ஒதுக்க வேண்டும். தமிழ் மொழியை இலக்கணப் பிழையின்றி எழுதுவதற்கான சிறப்புப் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“நடிகர் விவேக் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர்” – முதல்வர் இரங்கல்!

Gayathri Venkatesan

அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி: முரசொலி

EZHILARASAN D

சீன நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 74 ஆக உயர்வு

G SaravanaKumar