மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

மேற்குவங்க ரயில் விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி சென்ற கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை…

மேற்குவங்க ரயில் விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி சென்ற கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 8 மணி அளவில் விபத்துக்குள்ளானது. இந்த ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.

25க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சரக்கு ரயில் சிக்னலில் நிற்காமல் வந்ததுதான் இந்த கோர விபத்திற்கு காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது விபத்தின் பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.