முக்கியச் செய்திகள் தமிழகம்

பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல்

உயரதிகாரிகளின் அநீதிக்கு துணை போகாமல் நேர்மையாக பணியாற்றும் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாக, ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியைச் சேர்ந்த பெமிலா என்பவர், முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அதில், கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறையில் பல்வேறு விதமான ஊழல்கள் நடைபெறுவதாகவும், இதற்கு முக்கிய காரணம், நாகர்கோவில் சுகாதார பணிகள் முன்னாள் துணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன் எனக் கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் அவருக்குத் துணையாக செயல்படுகின்ற இவர் 2009 முதல் 2019 வரை தொடர்ந்து 10-வருடங்கள் ஒரே இடத்தில் தனது சொந்த ஊரில் நிர்வாக பணியில் அரசு விதிக்கு மாறாக இருந்ததாகவும் அவருக்கு துணை போகின்ற வட்டார மருத்துவ அலுவலர்களை ஒவ்வொரு வட்டாரத்திலும் நியமித்துள்ளதாகவும் அவர்களும் 10-வருடங்களுக்கு மேலாக ஒரே இடத்தில் அரசு விதிக்கு மாறாக ஒரே இடத்தில் பணி புரிந்து வருவதாகவும் அவர் கூறினார்.

இவர்கள் மக்களுக்கான அரசு நிதியை போலி ஆவணங்கள் மூலம் கையாடல் செய்து வருவகவும் மருத்துவமனைக்கு வராமலே மக்கள் வரி பணத்தில் சம்பளம் பெற்று வருவதாகவும் லஞ்சம் பெற்று கொண்டு மருத்துவ பணியிடத்தை டெபுட்டேசன் என்று டிரான்பர் என்ற பெயரில் இன்னொரு மருத்துவருக்கு விற்று அதிகார துஷ் பிரயோகம் செய்வதாக தெரிவித்த அவர், ஒழுங்கான முறையில் சிறப்பாக பணிபுரிந்து உயரதிகாரிகளுக்கு கப்பம் கட்டாத மருத்துவர்களை தொடர்ந்து பல வழிகளில் துன்புறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

இவர்கள் செய்யும் அநீதிக்கு துணை போகாத தன்னை பெண் மருத்துவர் என்றும் பாராமல் பணி இடத்திற்கு செல்ல விடாமலும் எனக்கும் எனது 6-வயது மற்றும் 3-வயது குழந்தைகளுக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் ,எனவே மாண்பு மிகு முதல்வர் தங்கள் நல்லாட்சியில் சுகாதார துறையில் நடக்கும் இந்த ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார.

மேலும் டாக்டர் மதுசூதனன் இணை இயக்குனர் மீது லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மற்றும் சிபிஐ விசாரணை நடத்தி உண்மைகளை கண்டறிய உத்தரவிட தாழ்மையுடன் கோட்டு கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் மாவட்டத்தில் தொடர்ந்து 10-வருடங்களுக்கு மேலாக ஒரே இடத்தில் வேலை பார்த்து லஞ்சத்திலும் முறைகேடுகளிலும் ஈடுபட்டு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கலெக்டர்களை குறிவைக்கும் சைபர் க்ரைம் கும்பல்!

Web Editor

பாஜக அரசு, தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவில்லை – வைகோ

Halley Karthik

பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலை திருவிழா

Web Editor