வாணி ஜெயராம் மறைவு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

மறைந்த பிரபல பின்னணி பாடகியான வாணி ஜெயராம் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 19 மொழிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் வாணிஜெயராம். இவர் சிறந்த…

மறைந்த பிரபல பின்னணி பாடகியான வாணி ஜெயராம் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 19 மொழிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட
பாடல்களை பாடியவர் வாணிஜெயராம். இவர் சிறந்த பின்னணி பாடகிக்காக 3 முறை தேசிய விருதையும் பெற்றுள்ளார். சமீபத்தில் கூட மத்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருது அறிவித்திருந்தது. பிரபல பின்னணி பாடாகியாக வலம் வந்த வாணி ஜெயராம் நேற்று உயிரிழந்தார்.

இவரது மறைவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டிடிவி. தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். மேலும், திரையுலகினர், பாடல் ஆசிரியர்கள், இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் என பலரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தினர். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி, கலையுலகின் மிகப் பெரிய இழப்பு என இரங்கல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிரபல பின்னணி பாடகியான வாணி ஜெயராம் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாணி ஜெயராம் மறைவானது தமிழ் திரை உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் பிறந்து பிறந்து 19 மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடி புகழக்கூடிய வாணி ஜெயராம் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்கள் பாடி மிகப்பெரிய சரித்திர சாதனை செய்துள்ளார்.

அண்மையில் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது..
ஆனால் பத்மபூஷன் விருதை வாங்குவதற்கு முன்னதாக எதிர்பாராத நிலையில் அவர் மறைந்துள்ளார். அவரது மறைவையொட்டி எனது ஆழ்ந்த அனுதாபங்களை அவரது குடும்பத்தாருக்கு. குறிப்பாக திரையுலகிற்கு வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.