சீகூர் வனப்பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு!

முதுமலை புலிகள் காப்பகம் சீகூர் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் ஆண் காட்டு யானை உயிரிழந்தது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் உள் மண்டலம் மற்றும் வெளிமண்டல வனப்பகுதியில் நுாற்றுக்கணக்கான யானைகள், ஆயிரக்கணக்கான புலிகள்,…

முதுமலை புலிகள் காப்பகம் சீகூர் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் ஆண் காட்டு யானை உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் உள் மண்டலம் மற்றும் வெளிமண்டல வனப்பகுதியில் நுாற்றுக்கணக்கான யானைகள், ஆயிரக்கணக்கான புலிகள், மான்கள், சிறுத்தை, புலி என பல விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மேலும் இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் சீகூர் வனசரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் வழக்கம் போல் பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது ஆண் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது.

இதனை மசினகுடி கோட்டம் துணை இயக்குநர், முதுமலை புலிகள் காப்பகம் வன கால்நடை மருத்துவர், கள இயக்குநருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் யானையின் இறப்பிற்கு என்ன காரணம் என்று பிரேத பரிசோதனைக்கு பின் தெரிய வரும் என அதிகாரிகளின் ஆலோசானைப்படி பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீப காலமாக தமிழகத்தில் காட்டு யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவம் வனஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

—அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.