குல்மார்க்கில் பனிச்சரிவில் சிக்கி இருவர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்மார்க் என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 வெளிநாட்டினர் உயிரிழந்தனர். குல்மார்க்கில் உள்ள ஸ்கை ரிசார்ட்டான ஹபத்குத் அபர்வத் சிகரத்தில் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் சிக்கி போலந்து நாட்டைச்…

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்மார்க் என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 வெளிநாட்டினர் உயிரிழந்தனர்.

குல்மார்க்கில் உள்ள ஸ்கை ரிசார்ட்டான ஹபத்குத் அபர்வத் சிகரத்தில் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் சிக்கி போலந்து நாட்டைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்த நிலையில், 19 பேரை மீட்பு படையினர் மீட்டனர்.

பாராமுல்லா காவல் துறை, மற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது” என்று  ட்விட்டரில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. அந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ சுற்றுலாப் பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரி 29ஆம் தேதி லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் பனிச்சரிவில் சிக்கி ஒரு பெண் மற்றும் ஒரு இளம்பெண் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.