சாக்லேட் சிரப்பில் இறந்த எலி – வீடியோ வைரல்!

ஆர்டர் செய்து வாங்கிய சாக்லேட் சிரப்பில் இறந்த எலி கிடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  பிரமி ஸ்ரீதர் என்ற பெண் ஜெப்போ நிறுவனத்தில் சாக்லேட் சிரப்பை ஆர்டர் செய்து வாங்கி உள்ளார்.  அந்த…

ஆர்டர் செய்து வாங்கிய சாக்லேட் சிரப்பில் இறந்த எலி கிடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பிரமி ஸ்ரீதர் என்ற பெண் ஜெப்போ நிறுவனத்தில் சாக்லேட் சிரப்பை ஆர்டர் செய்து வாங்கி உள்ளார்.  அந்த சாக்லேட் சிரப்பில் இறந்த எலி கிடந்ததை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாவில் பதிவு செய்தனர்.  அந்த வீடியோவில் அவர்கள் சிரப் முழுவதையும் ஒரு டம்ளரில் ஊற்றினர்.  அதில் ஏதோ விழுவது தெரிகிறது.  அது இறந்த எலி என்பதை உறுதி செய்ய தண்ணீரில் கழுவினர்.

பின்னர் அது இறந்த எலி தான் என்பது தெரிகிறது.  அவர் வெளியிட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.   அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:

“அந்த சாக்லேட் சிரப்பை கேக்குடன் சேர்த்து சாப்பிட்ட 3 சிறுமிகள் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டனர்.  அதில் ஒருவர் மயங்க மடைந்தார்.  பின்னர் அவர்களுக்கு மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவர்கள் தற்போது நலமுடன் உள்ளனர்.   ஜெப்டோவில் ஆர்டர் செய்து வாங்கிய சாக்லேட் சிரப்பை ஊற்றிய போது அதில் சிறிய அளவில் முடி கிடந்ததை பார்ததோம்.  உடனே நாங்கள் அதனை திறந்து சோதனை செய்தோம்.  நீங்கம் குழந்தைகளுக்கு வழங்கும் உணவுகளை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துவிட்டு கொடுங்கள்”  என்றார்.

மே 29 அன்று பகிரப்பட்ட இந்த வீடியோ 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகியுள்ளது.  பலரும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/reel/C7hb-SdvtjS/?utm_source=ig_embed&ig_rid=b2705f22-54d8-4271-8959-f54d14a577d5

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.