’கழுவேத்தி மூர்க்கனை’ பாராட்டிய தயாநிதி அழகிரி!!

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ’கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படக் குழுவினருக்கு தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான தயாநிதி அழகிரி பாராட்டு தெரிவித்துள்ளார். நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் “கழுவேத்தி மூர்க்கன்”. துஷாரா விஜயன், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர்…

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ’கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படக் குழுவினருக்கு தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான தயாநிதி அழகிரி பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் “கழுவேத்தி மூர்க்கன்”. துஷாரா விஜயன், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படம், மே 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ‘ராட்சசி’ படத்தை இயக்குநர் சை.கௌதம்ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார்.

அண்மையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற ’டாடா’ திரைப்படத்தின் தயாரிப்பாளரே, கழுவேத்தி மூர்க்கனையும் தயாரித்துள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ’கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படத்தை பார்த்த தயாநிதி அழகிரி, படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நேற்றிரவு கழுவேத்தி மூர்க்கனைப் பார்த்தேன். அது மிகவும் அருமையாக இருந்தது. கிராமத்துக் கதைப் பின்னணி கொண்ட இத்திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்களுக்கு நன்றி.

https://twitter.com/dhayaalagiri/status/1659099087805771777

கிளைமேக்ஸ் காட்சி படத்திற்கு கூடுதல் வலுசேர்க்கிறது. சந்தோஷின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. அருள்நிதியை நினைத்து பெருமைப்படுகிறேன். இது அவருடைய திரைப்பயணத்தில் நிச்சயம் ஒரு மைல்கல்லாக இருக்கும். எப்போதும் சுவாரஸ்யமான கதைகளை தேர்ந்தெடுத்து அவர் நடித்து வருகிறார் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இது அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம். படக்குழுவினருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.